2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்- அதிரடி கருத்துக்கணிப்பு வெளியீடு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் திருநாவுக்கரசு.சி தலைமையிலான குழு, மாநிலம் முழுவதும் விரிவான கள ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில், 234 தொகுதிகளைச் சேர்ந்த 23,329 வாக்காளர்கள் பங்கேற்றனர். மக்களின் கருத்துக்களை சமூக-கலாச்சார உளவியல் அணுகுமுறையில் திரட்டியுள்ளனர்.

மக்களின் மதிப்பீடு:
நலத்திட்டங்கள்: காலை உணவுத் திட்டம் (73% நன்று), விடியல் பயணத் திட்டம் (61%), இலவச வீட்டு மனை பட்டா (75%) ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
சவால்கள்: சட்டம்-ஒழுங்கு (72% மோசம்), லஞ்சம் (81% மோசம்), விலைவாசி உயர்வு (69% மோசம்) ஆகியவை மக்களின் அதிருப்திக்குரிய காரணிகளாக உள்ளன.
தேர்தல் நிலைமை:
இந்த ஆய்வு படி, தமிழகம் நான்கு முனைப் போட்டியை எதிர்கொள்ளும். திமுக (25.3%), த.வெ.க (24.7%), அதிமுக (22.8%) ஆகியவை முன்னிலையில் உள்ளன. கூட்டணி அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்களின் தாக்கம், வேலைவாய்ப்பு பிரச்சினைகள் மற்றும் மது அரசியல் போன்றவை வாக்காளர்களின் மனநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு, தமிழக மக்கள் தற்போதைய அரசியல் சூழலை நுணுக்கமாக கவனித்து வருவதையும், மாற்றத்திற்கான எதிர்பார்ப்பில் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.