விஜய் பையில் கத்தரிக்கோல்: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

Vijay
By Fathima Mar 14, 2026 12:32 PM GMT
Report

சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பானது.

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர்.

இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஏற்கனவே 2 முறை விசாரணைக்கு ஆஜரான விஜய் பதில் அளித்திருந்தார்.

விஜய் பையில் கத்தரிக்கோல்: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம் | Tvk Vijay Stopped In Chennai Airport

தற்போது மூன்றாவது முறையாக இன்று சிபிஐ விசாரணைக்காக இன்று மதியம் 3 மணி அளவில், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் விஜய்.

அங்கு அதிகாரிகளின் சோதனையின் போது, அவரது பையில் கத்திரிக்கோல் இருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விமானத்தில் கத்திரிக்கோல் போன்ற பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதியில்லை.

விஜய் பையில் கத்தரிக்கோல்: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம் | Tvk Vijay Stopped In Chennai Airport

எனவே அந்த கத்தரிக்கோலை தன்னுடன் வந்த நபரிடம் ஒப்படைத்து விட்டு, பிறகு விமானத்தில் புறப்பட்டார்.

இதுதொடர்பில் விமான நிலைய அதிகாரிகளிடம் விஜய் கடிதம் எழுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் 20 நிமிட தாமத்திற்கு பின்னர் விஜய் புறப்பட்டு சென்றார்.