உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசு அதிரடி
ஈரான்- அமெரிக்கா இஸ்ரேல் போரின் விளைவாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான உணவகங்கள், டீக்கடைகள் மூடப்படும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும் என தமிழக அரசின் மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அதாவது சிலிண்டருக்கு பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இந்த மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 சதவிகிதம், அதிகபட்சமாக ரூ.3.05 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்றும், பொது விநியோகத் திட்டத்தில் 3228 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.