T20 World Cup 2024: மொத்த பரிசுத்தொகையை அறிவித்த ICC - இத்தனை கோடிகளா?

Cricket Indian Cricket Team International Cricket Council Sports T20 World Cup 2024
By Jiyath Jun 04, 2024 05:56 AM GMT
Report

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை விவரத்தை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

T20 World Cup 2024: மொத்த பரிசுத்தொகையை அறிவித்த ICC - இத்தனை கோடிகளா? | T20 World Cup 2024 Icc Announced The Prize Money

மேலும், அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகளும் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை விவரத்தை ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 93.50 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட தெரியாத சின்ன பசங்க டீம்; திறமை, உடல் தகுதி எதுமே இல்ல - பாக். வீரர் ஆதங்கம்!

விளையாட தெரியாத சின்ன பசங்க டீம்; திறமை, உடல் தகுதி எதுமே இல்ல - பாக். வீரர் ஆதங்கம்!

பரிசுத்தொகை       

இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20 கோடியே 36 லட்சம்). இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடியே 63 லட்சம்).

T20 World Cup 2024: மொத்த பரிசுத்தொகையை அறிவித்த ICC - இத்தனை கோடிகளா? | T20 World Cup 2024 Icc Announced The Prize Money

மேலும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா சுமார் ரூ.6 கோடியே 54 லட்சம். சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா சுமார் ரூ.3 கோடியே 17 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் 9 முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா சுமார் ரூ. 2 கோடியே 5 லட்சம்.

இது மட்டுமில்லாமல் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை தவிர்த்து மற்ற சுற்று ஆட்டங்களில் (லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று) ஒரு போட்டியை வென்றால் ஒவ்வொரு அணிக்கும் தலா சுமார் ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.