டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் தோனி? நெகிழவைத்த சம்பவம் - இதை கவனிச்சீங்களா!
டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டியின்போது தோனி ரசிகர்களின் செயல் நெகிழ வைப்பதாக இருந்தது.
இந்தியா வெற்றி
2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் நேற்று மோதின. அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண சுமார் 20,000 ரசிகர்கள் வந்திருந்தனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 183 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எம்.எஸ்.தோனி
இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டி துவங்கியவுடன் ஒரு சிறு ரசிகர் கூட்டம், "வி மிஸ் யூ தோனி" என்ற பதாகையை ஏந்திக்கொண்டு நின்றிருந்தனர்.
இது இந்திய ரசிகர்களை மற்றும் எம்.எஸ்.தோனி ரசிகர்களை நெகிழ வைப்பதாக இருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
