T20 World Cup: அந்த வீரரை எடுக்கலாம்.. இந்தியா வெல்ல இதை செய்ய வேண்டும் - பிளெமிங்!
இந்திய அணியின் வீரர்கள் தேர்வுக்காக சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்
டி20 உலகைக்கோப்பை
டி20 உலகைக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது.
இந்நிலையில் மீண்டும் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வுக்காக சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங். அவர் கூறியதாவது "என்னைப் பொறுத்த வரை உலக கோப்பையின் போது இந்தியா எந்த வகையான திட்டத்தை விரும்புகிறார்கள்?
வெளிநாட்டில் விளையாடும்போது எது பொருந்தக்கூடிய ஸ்டைலாக இருக்கும்? என்பதை அவர்கள் அடையாளம் கண்டு விளையாட வேண்டும். அதை கண்டறிந்த பின் அதற்குத் தகுந்த வீரர்களை போடுங்கள்.
திறமையானவர்
எனவே நானாக இருந்தால் முதலில் எந்த ஸ்டைலில் விளையாட வேண்டும் என்பதை பார்ப்பேன். பின்னர் அதற்கு தகுந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களிடம் இதைப் பற்றி தகவல் கொடுப்பேன்.
இந்த டிசைனில் வெற்றி பெறுவதற்கான வேலையையும் அவர்களுக்கு கொடுப்பேன். துபேவின் பவர் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் அவரைப் பற்றி நான் சொன்னால் ஒருதலைபட்சமாக இருக்காதா? இருப்பினும் வித்தியாசமான பவரை கொண்டுள்ள அவரை என்னுடைய அணியில் தேர்ந்தெடுப்பேன். கடந்த வருடம் கடினமாக உழைத்த அவரை இம்பேக்ட் வீரர் விதிமுறையை வைத்து பயன்படுத்த வேலை செய்தோம்.
அத்துடன் அவர் தாம் எந்த அளவுக்கு திறமையானவர் என்பதை உணர்ந்தது முக்கியம். அப்போதிலிருந்து அவர் வேற லெவலுக்கு சென்று விட்டார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறியதற்காக அவர் விமர்சிக்கப்பட்டார். அவருக்குள் இன்னும் நிறைய திறமை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.