விளையாட தெரியாத சின்ன பசங்க டீம்; திறமை, உடல் தகுதி எதுமே இல்ல - பாக். வீரர் ஆதங்கம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரர் யாசீர் அரஃபாத்.
யாசீர் அரஃபாத்
டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் யாசீர் அரஃபாத் "இங்கிலாந்து அணியை பார்த்தபோது தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள் போல் இருந்தார்கள்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடத் தெரியாத சின்ன பசங்களை போல் இருந்தார்கள். பாகிஸ்தான் அணி விளையாடிய விதத்தை பார்க்கும் போது கொஞ்சம் கூட தொழில் முறை கிரிக்கெட் போல் இல்லை. நம்மைத் தாண்டி உலகமே வேறு எங்கேயோ முன்னேறிச் சென்று விட்டது.
பாபர் அசாம்
ஆனால், பல விஷயங்களில் பாகிஸ்தான் அணி பின்தங்கியுள்ளது. உதாரணத்திற்கு திறமை, உடல் தகுதி மற்றும் கேப்டன்சி என அனைத்திலுமே பின்தங்கி உள்ளது. உத்வேகமும் மந்தமாகத் தான் உள்ளது. இப்படி ஒரு சூழலிலிருந்து அவர்கள் எவ்வாறு முன்னேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் டி20 உலகக் கோப்பை பயிற்சி குறித்து பேசிய அந்த அணி கேப்டன் பாபர் அசாம் "இந்த தொடருக்காக தாங்கள் நல்ல முறையில் தயாராக இருக்கிறோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று கூறியுள்ளார்.