T20 World Cup: இந்திய அணியின் வீக்னஸ்; இத தவற விட்டுட்டீங்களே.. முன்னாள் வீரர் கருத்து!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் பேசியுள்ளார்.
இந்திய அணி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
அதில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் உள்ள பிரச்சனை குறித்து நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் பேசியுள்ளார்.
தவற விட்ட விஷயம்
அவர் கூறியதாவது "டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள். சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.