T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 'யுவராஜ் சிங்' - உறுதிப்படுத்திய ICC!
இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தூதர்களாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங் "இந்தாண்டு நடைபெறவுள்ள தொடர் இதுவரை நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை தொடர்களை விட பெரியதாக அமையவுள்ளது.
மகிழ்ச்சியளிக்கிறது
இந்த தொடரில் பங்கு வகிப்பது உற்சாகமளிக்கிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. கிரிக்கெட் வளர்ச்சியில் பங்கு வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2007-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பை மற்றும் 2011- ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆவர்.