கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் 'ரோஹித் ஷர்மா' - கெயில் வாழ்த்து!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.
இந்தியா வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று நடந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆப்பானிஸ்தானி அணி பவுலர்களை துவம்சம் செய்த ரோஹித் ஷர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ரோஹித் ஷர்மா
சாதனை பின்னர் 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தினார்.
இதற்கு முன் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெய்ல் ஆவார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ரோஹித் ஷர்மா (556 சிக்ஸர்கள்) , இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெய்ல் (553 சிக்ஸர்கள்) மூன்றாம் இடத்தில் அப்ரிடி (476 சிக்ஸர்கள்) உள்ளனர். மேலும் ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனைக்கு கிறிஸ் கெய்ல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.