இந்து மற்றும் இந்தியாவிற்கு எதிராக கருத்து - பாகிஸ்தான் தொகுப்பாளினி வெளியேற்றம்? ICC விளக்கம்!
பாகிஸ்தான் பெண் தொகுப்பாளினி இந்தியாவை வெட்டு வெளியேற்றியது தொடர்பாக ICC விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தான் தொகுப்பாளினி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்கும் குழுவில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் தொகுப்பாளர் சைனப் அப்பாஸ் என்பவரும் இடம்பெற்றிருந்தார். இதற்காக அவர் கடந்த வாரம் இந்தியா வந்து, பாகிஸ்தான்-நெதர்லாந்து போட்டியையும் தொகுத்து வழங்கினார்.
வெளியேற்றப்பட்டாரா?
இந்நிலையில் சைனப் அப்பாஸ், முன்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்து மதத்திற்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் பல கருத்துக்களை கூறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பல இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் மீது வழக்கு தொடுக்க போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் சைனப் அப்பாஸ் உடனடியாக இந்தியாவில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றார்.
இந்தியா அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நாடு திரும்பினார் என ஐசிசி பதிலளித்துள்ளது.