திடீரென தாக்கும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்? அறிகுறிகள் என்னென்ன தெரியுமா!
அமைதியான மாரடைப்பு வருவதன் அறிகுறிகளை தெரிந்துக் கொள்வோம்.
சைலன்ட் ஹார்ட் அட்டாக்
இளம் தலைமுறையினரை அமைதியான முறையில் தாக்கும் மாரடைப்பு (சைலன்ட் ஹார்ட் அட்டாக்) அதிகரித்து வருகிறது. இதுகுறித்த போதிய விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கின்றனர்.
மாரடைப்பு வரும் பெரும்பாலானோருக்கு நெஞ்சு வலி, சுவாசப் பிரச்சனை, தலைசுற்றல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியான முறையில்தான் தாக்குகிறது. காரணமே இல்லாமல் தொடர்ச்சியாக களைப்பாக, சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
அறிகுறிகள்
மூச்சுவிடுவதில் சிரமம், கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகு போன்ற உடலின் மேற்பகுதியில் வலியோ அசௌகரியமோ இருத்தல், தொடர்ச்சியான குமட்டல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் வந்தால் இதயத்தின் செயல்பாட்டில் பிரச்சனை போன்றவற்றை உணர்ந்தாலும் கவனம் தேவை.
இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டால் உடலில் வியர்வை அதிகமாகும். இவற்றோடு மற்ற அறிகுறிகளும் சேரும்போது நாம் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.