PCOD பிரச்சனை இருக்கா? இந்த உணவுமுறை மட்டும் கூடவே கூடாது!
PCOD பிரச்சனை இருப்பவர்கள் ஃபாலோ செய்ய வேண்டிய உணவுமுறை குறித்து பார்க்கலாம்.
PCOD பிரச்சனை
PCOD இருக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஓவுலேஷன், அதாவது கருமுட்டை வெளிவரும் செயல்முறை என்பது நடக்காமல் போகிறது. இதனால் கருத்தரிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பது, ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு அதிகரிப்பது போன்றவை ஏற்படுகிறது. இதனை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
உணவுமுறை
அவ்வாறு கட்டுப்படுத்துவதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் புரோட்டீன் எடுத்துக் கொள்வது அவசியம்.
டோஃபு, வஞ்சிரம் மீன், பீன்ஸ் இறால், கீரை, வேக வைத்த முட்டை போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பிரவுன் ரைஸ், பருப்பு வகைகள், பட்டாணி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.
இதில் கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கக்கூடாது என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், உடலுக்கு வலு சேர்க்கவும், அதற்கான ஆற்றலை வழங்கவும் உணவில் கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்டை நாம் நார்ச்சத்தோடு சேர்த்து சாப்பிட வேண்டும்.