வறண்ட சருமமா உங்களுக்கு ? - இழந்த பொலிவை சட்டென்று மீட்டெடுக்கும் பெஸ்ட் ரெமெடி இதோ
சருமம் வறண்டு முகத்தின் பொலிவு குறைந்து காணப்படுவது பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகவே இருக்கிறது.
அதுவும் வெப்பம் அதிகம் உள்ள வெயில் காலங்களில் நான் நம் சருமத்தை சற்று எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பார்த்துக்கொள்வது மிக முக்கியம்.
இதனை சரிசெய்ய தினமும் மாயிஸ்சுரைஸர் என்று கூறப்படும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் கலவையை உபயோகப்படுத்தினாலே போதும்.
அப்படி வறண்ட சரும பிரச்சினையால் அவதிபடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஈசி மாயிஸ்சுரைஸர் ரெமெடி.
மற்றவற்றை காட்டிலும் வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றுகிறது.
கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.
செம்பருத்தி மாய்ஸ்சுரைசர் உண்டாக்க தேவயான பொருட்கள்; செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி, ரோஜா பொடி - 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி.
சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து,
பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும்.
இந்த கலவையை மாய்ஸ்சுரைசர் போன்று தினமும் முகத்தில் போட்டு வந்தால் வறண்ட சருமம் விரைவில் படிப்படியாக சரியாகி முகம் பொலிவு பெறும்.