சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் கணக்கு; வெளியான பட்டியல் - பரபரப்பு!

India Switzerland
By Sumathi Oct 11, 2023 03:52 AM GMT
Report

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு 

இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் கணக்கில் காட்டப்படாத பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்துள்ளனர்.

சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் கணக்கு; வெளியான பட்டியல் - பரபரப்பு! | Switzerland Shared Bank Account Details Of Indians

அதனைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக சுவிஸ் இந்தியர்களின் வங்கி கணக்கு பகிர்ந்து கொண்டது. இந்நிலையில், 5-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் ரூ.20,700 கோடி இந்தியர்களின் பணம் - கருப்பு பணமும் பல மடங்கு அதிகரிப்பு!

சுவிஸ் வங்கியில் ரூ.20,700 கோடி இந்தியர்களின் பணம் - கருப்பு பணமும் பல மடங்கு அதிகரிப்பு!

வெளியான லிஸ்ட்

இந்த தொகுப்பில், இந்தியா உள்பட 104 நாடுகளைச் சேர்ந்த 36 லட்சம் வங்கி கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள்,

சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் கணக்கு; வெளியான பட்டியல் - பரபரப்பு! | Switzerland Shared Bank Account Details Of Indians

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாடுவாழ் இந்தியர்கள், அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் ஆகியோரின் வங்கி கணக்குகள் உள்ளன. மேலும், சிலரது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.