சுவிஸ் வங்கியில் ரூ.20,700 கோடி இந்தியர்களின் பணம் - கருப்பு பணமும் பல மடங்கு அதிகரிப்பு!
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு கடந்த ஆண்டு ரூ.20,700 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகை மட்டுமே.
பொதுவாக இந்தியர்கள் தங்களுடைய கருப்பு பணத்தை வெளிநாட்டில் குறிப்பாக சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுவது உண்டு. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதன் பிறகு சுவிஸ் வங்கியின் கருப்பு பணம் தொடர்பாக மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்வதும் படிப்படியாக குறைந்துவந்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இந்தியர்கள் ரூ.6,625 கோடி மட்டுமே முதலீடு செய்திருந்தார்.
இந்தத் தொகை கடந்த ஒர் ஆண்டில் மட்டும் பல மடங்கு அதிகரித்து ரூ.20,700 கோடியாக தற்போது உள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இது நேரடியாக செய்யப்பட்ட முதலீடுகள் என்கிற நிலையில், பிணாமி அல்லது மூன்றாம் நபர்கள் மூலம் மறைமுகமாக தாக்கல் செய்யப்படும் கருப்பு பணமும் பல மடங்கு அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.