ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்
By Irumporai
ஆருத்ரா நிதி நிறுவன ஊழல் புகாரில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே . சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடகியுள்ளனர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி :
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதில் தமிழக பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
வங்கி கணக்கு முடக்கம்
இந்த நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷிற்கு தொடர்பு உள்ளதாக அவருக்கு ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே சுரேஷ் விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாத காரணத்தால் குற்றப்பிரிவு போலிசார் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.