ரூ.85 ஆயிரம் கோடி சொத்து; தோட்டக்காரருக்கு கொடுக்க முடிவெடுத்த கோடீஸ்வரர் - யார் அவர்?
ரூ.85,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை, கோடீஸ்வரர் தனது தோட்டக்காரருக்கு தானமாக கொடுக்கவுள்ளார்.
நிக்கோலஸ் பியூச்
பிரான்ஸின் புகழ்பெற்ற ஹெர்மீஸ் நிறுவனத்தின் நிறுவனர் தியரி ஹெர்மீஸின் கோடீஸ்வர பேரன் நிக்கோலஸ் பியூச்.
இந்நிறுவனம் வீட்டு அலங்கார பொருட்கள், லெதர் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பொருட்கள், வாசனை திரவியங்கள், நகைகள், வாட்ச், ஆடைகள் என பல்வேறு ஆடம்பர பொருட்களை தயாரித்து வருகிறது. 80 வயதாகும் நிக்கோலஸ் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. குழந்தையும் இல்லை.
சொத்து தானம்
இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.85,000 கோடி (900 கோடி சுவிஸ் பிராங்). இந்நிலையில், தனது 51 வயதான முன்னாள் தோட்டக்காரரை தத்தெடுப்பது அவரை தனது அடுத்த வாரிசாக அறிவிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப உறுப்பினர்களுடனான மனக்கசப்பு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தோட்டக்காரர் பெயர் தெரிவிக்கப்படவில்லை. அவர் ஸ்பெயின் பெண்ணை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளின் தந்தை என்று தெரியவருகிறது,
அந்நாட்டில் வயது வந்த ஒருவர் குறைந்தது ஒரு வருடமாவது ஒன்றாக வாழ்ந்தால் மற்றொரு பெரியவரை தத்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.