நடுவானில் மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரர் - வைரலாகும் வீடியோ!

Dubai Viral Video Marriage
By Sumathi Nov 28, 2023 08:45 AM GMT
Report

விமானத்தில் கோடீஸ்வரர் ஒருவர் மகளின் திருமணத்தை நடத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

விமானத்தில் திருமணம்

அமீரகத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லி. இவர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நகைகள் மற்றும் வைர நகை கடைகளை நடத்தி வருகிறார். இவரது மகள் விதி பாப்லி.

wedding-in-private-jet

இவருக்கு ஹரிதேஷ் சைனானி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து, இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி, துபாயில் இருந்து ஓமனுக்குச் செல்லும் 3 மணி நேர விமான பயணத்தின்போது துபாயில் போயிங் 747 விமானத்தில் நடைபெற்றது.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் - அந்தரங்க இடங்களில் தொட்டு எல்லை மீறிய முதியவர்!

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் - அந்தரங்க இடங்களில் தொட்டு எல்லை மீறிய முதியவர்!

வைரல் வீடியோ

இந்த திருமணத்திற்கு அவர்களது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்பட 350 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த விமானம் திருமண விழாவுக்காக மாற்றியமைக்கப்பட்டது. விமானத்தில் பிரபலமான இந்தி பாடலுக்கு விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

அதன்பின், விமானத்தில் விருந்தினர்களுக்கு, விருந்து வழங்கப்பட்டது. இதேபோல், அவரது பெற்றோரும் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் திருமணம் செய்துக்கொண்டவர்கள். இந்த திருமண விழா அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. தற்போது, இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.