உலகின் கோடீஸ்வரர் பட்டியல்: முதலிடத்தில் 19 வயது இளைஞர்; ரூ.33,000 கோடி - யார் அவர்?

Italy World
By Jiyath Nov 27, 2023 04:40 AM GMT
Report

உலகின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இத்தாலியை சேர்ந்த 19 வயது இளைஞர் முதலிடம் பிடித்துள்ளார்.

கோடீஸ்வரர் பட்டியல் 

சர்வதேச அளவிலான இளம் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் 'போர்ப்ஸ்' (Forbes) இதழ் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு (2023) வெளியிட்டுள்ள பட்டியலில் இத்தாலியைச் சேர்ந்த கிளமென்ட் டெல் வெக்சியோ என்ற 19 வயது இளைஞர் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் கோடீஸ்வரர் பட்டியல்: முதலிடத்தில் 19 வயது இளைஞர்; ரூ.33,000 கோடி - யார் அவர்? | 19Year Old Italian World Youngest Billionaire List

'லியோனார்டோ டெல் வெக்சியோ' என்பவர் உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி உற்பத்தி நிறுவனமான 'எஸ்ஸிலோர் லுக்சோட்டிகாவின்' முன்னாள் தலைவர் ஆவார். இவரின் மகன்தான் கிளமென்ட். கடந்த ஆண்டு லியோனார்டோ தனது 87 வயதில் காலமானார்.

'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'; அவரின் மகள் என்னிடம் கூறிய தகவல்கள்.. - இயக்குநர் கௌதமன்!

'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'; அவரின் மகள் என்னிடம் கூறிய தகவல்கள்.. - இயக்குநர் கௌதமன்!

கிளமென்ட் டெல்

இதனையடுத்து அவரின் ரூ.2.12 லட்சம் கோடி சொத்துக்களை மனைவி மற்றும் கிளமென்ட் உள்ளிட்ட 6 பிள்ளைகள் பிரித்துக் கொண்டனர். இதன் காரணமாக உலகின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் கிளமென்ட் இடம்பிடித்துள்ளார்.

உலகின் கோடீஸ்வரர் பட்டியல்: முதலிடத்தில் 19 வயது இளைஞர்; ரூ.33,000 கோடி - யார் அவர்? | 19Year Old Italian World Youngest Billionaire List

அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.33,000 கோடியாக உள்ளது. இருந்தும் கிளமண்ட் தற்போது படிப்பில் கவனம் செலுத்துகிறார். அறிவியல், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அவர் கல்லூரிக்குச் சென்று அந்தத் துறைகளில் வாழ்க்கையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.