'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'; அவரின் மகள் என்னிடம் கூறிய தகவல்கள்.. - இயக்குநர் கௌதமன்!

Tamil nadu Sri Lanka India Velupillai Prabhakaran
By Jiyath Nov 27, 2023 03:07 AM GMT
Report

இன்று மாலை 5.30 மணிக்கு மேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன்

கடந்த 2009ம் ஆண்டு இறுதிகட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் 'பிரபாகரன்' இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், "பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார்.

அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு இதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேசி சர்ச்சையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், "பிரபாகரனும் அவரின் மனைவி மதிவதனியும், மகள் துவாரகாவும் நலமுடன் இருக்கிறார்கள்” என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குநருமான கெளதமன் அறிவித்துள்ளார்.

தவறான நோக்கம்.. எனக்கு தொந்தரவு கொடுக்க பணியிட மாற்றம் - நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு!

தவறான நோக்கம்.. எனக்கு தொந்தரவு கொடுக்க பணியிட மாற்றம் - நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு!

உயிரோடு இருக்கிறார் 

இது தொடர்பாக அவர் பேசியதாவது "பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன், என்னிடம் அலைப்பேசியில் பேசினார், அப்போது பிரபாகரன் குறித்தும் வினவினேன். அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு, அப்பாவும், அம்மாவும் நலமுடன் இருக்கிறார் எனச் சொன்னார்.

மேலும், மாவீரர் நாளான நவம்பர் 27ம் தேதி (இன்று) மாலை 5.30 மணிக்கு மேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்றும் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் துவாரகாவின் வருகையை வரவேற்க வேண்டும். அவர் அரசியல் ரீதியாக இயங்கவிருப்பதாகத் தெரிகிறது” என்கிறார். கௌதமனின் இந்த அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.