பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் : பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

LTTE Leader
By Irumporai Feb 13, 2023 06:10 AM GMT
Report

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழ் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் உள்ளார்

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.

பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் : பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் | Prabhakaran Alive Well Says Pazha Nedumaran

பழ நெடுமாறன் தகவல்

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.

பிரபாகரன் பற்றிய உண்மையை கூற இருக்கிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.