காவலாளியை சராமரியாக அடித்து உதைக்கும் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
நேற்று முன்தினம் சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 503 குடியிருப்பில், ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி பாய் சரத்குமார் உணவை கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட் சரியாக வேலை செய்யவில்லை. இதனால், லிப்டில் உள்ள எமர்ஜன்சியை அழுத்தியுள்ளார். இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒடிசாவை சேர்ந்த 33 வயதான பிரதீப்குமார் ராவத், லிப்ட்டை சீக்கிரம் திறக்கவில்லை என ஸ்விகி பாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
காவலாளியை தாக்கிய டெலிவரி பாய்ஸ்
இதனால், காவலாளிக்கும், டெலிவரி பாய்க்கும் வாக்குவாதம் முற்றி சண்டையானது. இதில், ஆத்திரமடைந்த டெலிவரி பாய் சரத்குமார் தனது நண்பர்கள் மூன்று பேரை கூட்டிக் கொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவலாளியை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து காவலாளி பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது, காவலாளியை ஸ்விகி டெலிவரி பாய் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
வைரலாகும் வீடியோ
இதனையடுத்து, போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் இது குறித்த சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்விகி டெலிவரி பாய் குடியிருப்பு காவலாளியை நண்பர்களுடன் தாக்கியதால் இன்று முழுவதும் அந்த குடியிருப்பு பகுதியில் ஸ்விகி டெலிவரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் திருமாவின் ஓவியத்தை வரைந்த கலைஞர் - வைரலாகும் வீடியோ