இந்த நாட்டை விட்டு வெளியேறுவோருக்கு உதவி தொகை - எங்கு, ஏன் தெரியுமா?
நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு டிக்கெட்டுடன், உதவித் தொகையையும் அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்
ஐரோப்பிய கண்டத்தில் அங்கம் வகிக்கும் நாடு ஸ்வீடன். இங்கு குடியுரிமை அமைச்சராக இருப்பவர் மரியா மல்மார் ஸ்டெங்கார்ட். இவர் மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டில் பிறந்த எந்த ஸ்வீடன் குடிமகனும் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறாரோ அவர் அதை தானாக முன்வந்து செய்யலாம். இதற்காக அவர்கள் பணம் பெறுவார்கள். அதுமட்டுமின்றி, வெளிநாட்டிற்கு செல்வதற்கான கட்டணமும் அரசால் வழங்கப்படும்.
மக்கள்தொகை அதிகரிப்பு
இத்திட்டத்தின் கீழ் அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோர் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பினால் அவர்களுக்கு 10 ஆயிரம் ஸ்வீடிஷ்(இந்திய மதிப்பில் ரூ. 80 ஆயிரம்) வழங்கப்படும். சிறுவர்களுக்கு (ரூ. 40 ஆயிரம்) வழங்கப்படும்.

உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் ஸ்வீடனில் வந்து குடியேறுவதால் 20 ஆண்டுகளில் இந்த நாட்டின் மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளில் பிறந்து ஸ்வீடனில் குடியேறியுள்ளவர்களுக்கு தான் இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்நாட்டின் பூர்வீக குடிமக்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil