உலகில் இந்த 5 நாடுகளில் இரவே இல்லையாம் - என் தெரியுமா?
உலகில் சூரியன் மறையாத 5 நாடுகளை குறித்து இந்த பதிவில் காணலாம்.
இரவே இல்லை
பொதுவாக உலகமே பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை இயங்குவது இயல்பு. ஒரு நாளின் கல் முடிந்ததும், சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகிறது. மறுபடியும் அடுத்த நாள் சூரியன் அதன் வேலையை மீண்டும் பார்க்கும்.
இப்படி தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், சில நாடுகளில் பகல், இரவு என்பது தனித்தனியாக இல்லை என்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நார்வே
நார்வேயில் மே மாத இறுதியில் தொடங்கி ஜூலை மாதம் வரை 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை.
இதனால், ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள இந்த நாடு நள்ளிரவு சூரியனின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
நுனாவுட், கனடா
ஆர்க்டிக் வட்டத்திற்கு சுமார் இரண்டு டிகிரி மேலே, நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் இரண்டு மாதங்களுக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி பிரகாசிக்கிறது. அதேபோல, தொடர்ந்து 30 நாட்களுக்கு முற்றிலும் இருட்டாக இருக்கும்.
ஐஸ்லாந்து
கோடை காலத்தில் ஐஸ்லாந்து இருள் சூழ்ந்து இருக்கும்.
அதுவே, ஜூன் மாதத்தில் சூரியன் மறையாததால் வெளிச்சமாக இருக்கும்.
பாரோ, அலாஸ்கா
இந்த நாட்டில், மே-ஜூன் வரை சூரியன் மறைவதில்லை.
நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு சூரியன் உதிக்காதாம். இது போலார் நைட் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்வீடன்
ஸ்வீடனில் மே மாதம் ஆரம்பத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதயமாகும்.
தொடர்ந்து 6 மாதங்கள் சூரியன் மறையாமல் பகல் மட்டுமே இருக்கும்.