இவ்வளவு நடந்தும் திருந்தல - சூர்யகுமாரை பன்றி என பேசிய பாக். வீரர்!
பாக். வீரர் சூர்யகுமார் யாதவை பன்றி என அழைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான்
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த தோல்விக்குப் பின், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி விவாதத்தின் போது சூரியகுமார் யாதவை "பன்றி" என்று அழைத்தார்.
"இந்தியாவால் அவர்களின் திரைப்பட உலகத்திலிருந்து வெளியேற முடியவில்லை. நடுவர்களை பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கும் விதம், போட்டி நடுவர் மூலம் பாகிஸ்தானை சித்திரவதை செய்யும் விதம் குறித்து இந்தியா வெட்கப்பட வேண்டும். இது ஒரு உயர்ந்த விஷயம்" என கூறினார்.
யூசுப் மோசமான விமர்சனம்
இதனை தொடர்ந்து பல முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது தான் யாரையும் விமர்சிக்கும் எண்ணம் இல்லை என்று யூசுப் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்த பேச்சுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன்லால் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "முதலில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அவருடைய வீரர்களை எப்படி விமர்சிக்கிறார்கள் என்று பாருங்கள்.
தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக அவர்களது அணி தோல்வியை தழுவி வருவதால் விரக்தியில் இருக்கிறார்கள்." என கூறியுள்ளார்.