பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்த இந்தியா; இதுதான் காரணம் - சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்த காரணம் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
ind-vs-pak
2025 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டனர். இது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ்,
"எங்கள் அரசும், பிசிசிஐயும் இந்த விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், அதற்கான சரியான பதிலடியைக் களத்தில் கொடுத்துள்ளோம்.
சூர்யகுமார் யாதவ் விளக்கம்
விளையாட்டு உணர்வையும் தாண்டிய சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்று நான் நினைக்கிறேன். இதை நான் ஏற்கனவே பரிசளிப்பு விழாவிலேயே கூறிவிட்டேன். பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும்,
அவர்களது குடும்பங்களுடனும் நாங்கள் உறுதியாகத் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.மேலும், நான் சொன்னது போல, இந்த வெற்றியை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்திய நமது துணிச்சல் மிக்க ராணுவப் படைகளுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிப்பதைப் போல, எங்களால் முடிந்தபோதெல்லாம், அவர்களைப் புன்னகைக்க வைக்கும் வாய்ப்புகளைக் களத்தில் ஏற்படுத்திக் கொடுப்போம்" என்று பதிலளித்தார்.