இந்தியா -பாக் ஆசிய கோப்பைக்கு எதிர்ப்பு- செக் வைத்த உச்சநீதிமன்றம்

Indian Cricket Team Supreme Court of India
By Sumathi Sep 11, 2025 01:55 PM GMT
Report

 இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான்

2025 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 14 அன்று இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

ind vs pak

உர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அதில், ‘‘பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்வது தேசிய கண்ணியம்,

பொது உணர்வுக்கு எதிரானது. இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் நல்லெண்ணத்தையும் நட்பையும் காட்டுவதற்காகவே என்று அது கூறுகிறது. ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நமது மக்கள் தியாகம் செய்யப்பட்டு,

பாலியல் புகார் - காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர்!

பாலியல் புகார் - காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர்!

நீதிமன்றம் மறுப்பு

நமது வீரர்கள் அனைத்தையும் பணயம் வைத்தபோது, ​​பாகிஸ்தானுடனான ஒரு போட்டி நாட்டிற்கு தவறான முன்னுதாரணம். நமது வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் அதே வேளையில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அதே நாட்டோடு விளையாட்டைக் கொண்டாடப் போகிறோம்.

supreme court

இது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கைகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் புண்படுத்தக்கூடும். நாட்டின் கண்ணியமும், குடிமக்களின் பாதுகாப்பும் பொழுதுபோக்குக்கு முன் முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, நீதிபதி விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இதில் என்ன அவசரம்? இந்த ஞாயிற்றுக்கிழமை போட்டி? இதில் நாம் என்ன செய்ய முடியும்? அது நடக்கட்டும். போட்டி தொடர வேண்டும்" என்று கூறினர்.

அப்போது குறிக்கிட்ட வழக்கறிஞர், ​‘‘​எனது வழக்கு மோசமாக இருக்கலாம். ஆனால் தயவுசெய்து அதைப் பட்டியலிடுங்கள்’’ என்று கூறினார். இதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.