வாடகை தாயாக வந்த பெண் ..7வது மாடியில் இருந்து குடித்து தற்கொலை - விசாரணை அதிர்ச்சி!

Sexual harassment Telangana Death Women
By Vidhya Senthil Nov 28, 2024 04:30 PM GMT
Report

   வாடகைத் தாயாக வந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா

தெலங்கானா மாநிலம் ராயதுர்கம் பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்பாபு (54). இவர் தொழிலதிபராக உள்ளார். இவருக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், ராஜேஷ்பாபுவும் அவரது மனைவியும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர்.

Surrogate mother dies in Telangana

இதற்காக ஒடிசாவைச் சேர்ந்த அஷ்ரிதா சிங் (25) என்ற பெண்ணை ₹10 லட்சம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் தங்கியிருந்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் 7வது மாடியில் அஷ்விதா மற்றும் அவரது கணவர் சஞ்சய் சிங் தங்க வைத்துள்ளார்.

மார்பில் கத்தி குத்து..வலது கண் இல்லை - 3 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!

மார்பில் கத்தி குத்து..வலது கண் இல்லை - 3 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!

ஆனால் ராஜேஷ்பாபு அடிக்கடி அஷ்விதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த நிலையில் நேற்று அவரின் தொல்லை அதிகரிக்கவே 9வது மாடியிலிருந்து 7வது மாடியில் உள்ள தனது வீட்டிற்குச் சேலை கட்டி இறங்க முயன்றுள்ளார்.

   வாடகைத் தாய்

அப்போது எதிர்பாராத விதமாக கைகள் நழுவி கீழே விழுந்து பரிதாபமாக அஷ்விதா உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகக் கணவர் சஞ்சய் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தெலங்கானாவில் வாடகை தாயாக வந்த பெண் உயிரிழப்பு

புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.