மார்பில் கத்தி குத்து..வலது கண் இல்லை - 3 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையின் போது கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது சிறுன்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி என்ற இரு சமூகங்களுக்குள் எழுந்த பிரச்சனை கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து வருகிறது. தொடர்ந்து பதற்றமும் நிலவிவருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
அதில் குக்கி மற்றும் மெய்தி பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் நிவாரண முகாமிலிருந்த மெய்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் 6 பேர் காணவில்லை எனக் கூறப்பட்டது .
இதனையடுத்து அவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட போது பராக் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, எல் சிங்கிங்கன்பா சிங் என்ற 3 வயதுக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மணிப்பூர்
தற்பொழுது சிறுவனின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த மூன்று வயதுக் குழந்தையின் மண்டை ஓட்டில் குண்டுக் காயம் இருந்துள்ளது .
மேலும் அந்த குழந்தையின் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவனின் முன்கை மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் காயங்கள் உள்ளதாகவும் , குறிப்பாக அவரது வலது கண் காணவில்லை எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.