அர்விந்த் கேஜ்ரிவால்; முதல்வர் பதவியிலிருந்து நீக்க மனு - உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்கக்கோரிய மனுவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அர்விந்த் கேஜ்ரிவால்
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாஜக அரசின் மீது தொடர் குற்றசாட்டுகளை வைத்து வரும் அவர் புதிய மதுபான கொள்கை காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவருக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
இந்த புகார்கள் மற்றும் அவை தொடர்பான விசாரணைகள் காரணமாக முதல்வர் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “அவ்வாறு கோருவதற்கு சட்டபூர்வ உரிமை இல்லை” எனக் கூறி,
அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். இருப்பினும், கேஜ்ரிவாலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளின் வரிசையில், முக்கியமான இன்னொரு வழக்கு நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது. அதிலும், டைக்கால ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கேஜ்ரிவாலுக்கு எதிரான முக்கிய சட்டச்சிக்கலை இது எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.