வெளிவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்!!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மீ கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். கடந்த மார்ச் 21-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் முதலமைச்சர்கள் ஜார்கண்ட்டின் ஹேமந்த சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இடைக்கால ஜாமீன்
தன்னுடைய கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராத சூழலில், அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக அலுவல் பணியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படவில்லை, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.