ஜாமீன் பெறுகிறாரா அர்விந்த் கெஜ்ரிவால்!! உச்சநீதிமன்றம் சொன்ன பாய்ண்ட்

Delhi Supreme Court of India Arvind Kejriwal
By Karthick May 03, 2024 03:02 PM GMT
Report

ஜாமீன் பெரும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மீ கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். கடந்த மார்ச் 21-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

arvind kejriwal getting bail in supreme court

நாட்டின் முதலமைச்சர்கள் ஜார்கண்ட்டின் ஹேமந்த சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தன்னுடைய கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

arvind kejriwal getting bail in supreme court

நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராத சூழலில், அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

25 கோடி வரை பேரம் - MLA'க்களை இழுக்க முயற்சி - பாஜகவின் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

25 கோடி வரை பேரம் - MLA'க்களை இழுக்க முயற்சி - பாஜகவின் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

அங்கு தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பிற்கு சாதகமான குரல் எழுகிறது. இன்று மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள், வழக்கின் விசாரணை நீண்ட காலம் நடைபெறும் என்பதால் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்காலமாக அவருக்கு(கெஜ்ரிவாலுக்கு) ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம் என்றனர்.

arvind kejriwal getting bail in supreme court

இன்னும் ஜாமீன் வழங்கவில்லை என உறுதியாக தெரிவித்த நீதிபதிகள் பரிசீலனைக்கவே இருப்பதாக தெளிவுப்படுத்தி கெஜ்ரிவால் முதல்வராக தொடரும் நிலையில், அவர் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட வேண்டுமா? என்றும் நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் ஜாமீன் வழங்கினால், எம்மாதிரியான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து அமலாக்கத்தறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.