இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா? கெஜ்ரிவால் பரபரப்பு பதில்
அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்தியா கூட்டணி - கெஜ்ரிவால்
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாஜக அரசின் மீது தொடர் குற்றசாட்டுகளை வைத்து வரும் அவர் புதிய மதுபான கொள்கை காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவருக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர்
ஆனால், ஒரு முதல்வராக அலுவல் பணியில் ஈடுபட அனுமதி இல்லை. ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டுகிறார். இந்நிலையில், அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நீங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நேரடியாக பதிலளித்த அர்விந்த் கெஜ்ரிவால், நான் பிரதமர் வேட்பாளர் இல்லை" என்றார்.இன்னும் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.