இறந்த சடலத்துடன் உடலுறவு தவறில்லை - உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!

Sexual harassment Karnataka Supreme Court of India Crime
By Sumathi Feb 06, 2025 08:02 AM GMT
Report

சடலத்துடன் உறவுகொள்வது குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.

சடலத்துடன் உறவு

கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரங்காராஜ். இவர் தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து, சடலத்துடன் உறவு கொண்டார்.

இறந்த சடலத்துடன் உடலுறவு தவறில்லை - உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு! | Supreme Court On Sexual Act Dead Body Amounts

இந்த வழக்கின் விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், சடலத்துடன் உறவு என்பது பிரிவு 375-இன் கீழ் பலாத்காரம் ஆகாது; 377ஆம் பிரிவு இயற்கைக்கு மாறான உறவின் வரம்பில் வராது. பிரிவு 375, 377ஐ கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதன் அல்லது நபர் என்று அழைக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தது.

மேலும் பாலியல் வன்புணர்வு வழக்கில் இருந்து ரங்கராஜ் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போது இந்த வழக்கின் மனு மீதான விசாரணையில், "இந்த பிரச்னையை பார்லிமென்ட்தான் ஆராய வேண்டும்.

கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!

கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!

நீதிமன்ற தீர்ப்பு

தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரலாம். இதுதொடர்பாக அரசு, பார்லிமென்ட்டிற்கு கடிதம் எழுதலாம். சடலத்துடன் உறவைக் குற்றமாக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. பிரிவு 377இல் திருத்தம் செய்ய வேண்டும்.

supreme court of india

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நீதிமன்றம் உட்பட சர்வதேச நீதிமன்றங்கள் சடலத்துடன் உறவுகொள்வதை பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் கொண்டு வர தண்டனை சட்டத்தின் பிரிவுகளை விரிவுபடுத்தி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. இதனால் கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளனர்.