கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!
அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்கள் அனுபவம்
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு 104 பேர் வந்தடைந்தனர்.
இந்நிலையில் இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தில் வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் கூறுகையில்,
“கடந்த ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைந்தபோது அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் என்னை பிடித்தனர். முறையான விசா மூலம் என்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொல்லிய டிராவல் முகமை நிறுவனம் என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு
அமெரிக்கா செல்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று செலவு செய்துள்ளேன். நான் பிரேசிலில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு 11 நாள் காவலில் இருந்த நிலையில் நாடு திரும்பி உள்ளேன்.
There are news reports of Indians being deported from the US. News channels and Several social media accounts have shared images of US migrants being sent back by handcuffing them. But these viral images are of immigrants being deported to Guatemala, Ecuador and Colombia, not of… pic.twitter.com/yY5sjGiPFn
— Mohammed Zubair (@zoo_bear) February 5, 2025
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது எங்களின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்கள் பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டது. நாங்கள் வந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே சங்கிலி அகற்றப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் விமானம் தரையிறங்கியதும் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வாகனம் மூலமாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு தரப்பில் மறுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.