உல்லாசத்தின் போது காதலனை கழுத்தை நெரித்து கொன்ற பெண் - பகீர் பின்னணி!
உறவின் போது காதலனை கழுத்தை நெரித்து பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பரேலி என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால்(32) என்பவர் சேலைகளுக்கு ஜரிகை போடும் வேலை செய்து வந்துள்ளார்.
அதன்படி கிராமங்களுக்கு ஜரி வேலைக்காக சென்ற போது இந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். தொடர்ந்து அப்பெண்ணை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்றபோது அப்பெண்ணை கட்டாயப்படுத்தி இக்பால் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
மேலும், உறவு வைத்துக்கொண்டபோது எடுத்த வீடியோவை கணவரிடம் காட்டிவிடுவதாக மிரட்டி அடிக்கடி உறவு வைத்துள்ளார். இதற்கிடையில் இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மிரட்டிய காதலன்
அப்போது இந்த பெண்ணை கைது செய்து விசாரித்ததில், ''இக்பால் அடிக்கடி மிரட்டியதால் மிகவும் வெறுப்படைந்தேன். எனவே அவரது வீட்டிற்கு செல்லும்போது நான் சாகவேண்டும். அல்லது இக்பாலை கொலை செய்யவேண்டும் என்று நினைத்தேன். எனது கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து உறங்கவைத்துவிட்டு இக்பால் வீட்டிற்கு சென்றேன்.
அங்கு இக்பாலுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் உறவு வைத்துக்கொண்டபோது அவரது நெஞ்சில் அமர்ந்து கொண்டேன். அப்போது இக்பால் வாயை ஒரு கையால் பொத்திக்கொண்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் உடலை வீட்டிற்கு வெளியில் இழுத்துக்கொண்டு வந்து போட்டுவிட்டேன்''என்று தெரிவித்துள்ளார்.