தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு என்ன?
உச்சநீதிமன்றத்தில் தன்பாலின திருமணம் குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தன்பாலின திருமணம்
இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
நீதிபதி தீர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், திருமணம் என்பது நிலையானது மற்றும் மாறாதது என்று கூறுவது தவறான கருத்து. தன்பாலின திருமணம் தொடர்பாக நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது.

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil