26 வார கர்ப்பம்; கலைக்க அனுமதி தரமுடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
26 வார கர்ப்பத்தை கலைக்க பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
கருக்கலைப்பு
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மோசமான நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால்,
இப்போது 26 வாரங்களில் தனது மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க கோரியிருந்தார். இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பெண்ணின் மனுவை அனுமதித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
ஆனால், கரு உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவித்ததை அடுத்து, இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
அதன்பின், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கர்ப்பத்தின் காலம் 24 வாரங்களைக் கடந்துவிட்டதால், கர்ப்பத்தை கலைக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், அந்தப் பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமணமான பெண்கள், கற்பழிப்பில் இருந்து தப்பியவர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மைனர்கள் போன்ற பிற பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு கர்ப்பத்தை கலைப்பதற்கான உச்ச வரம்பு 24 வாரம் என்பது குறிப்பிடத்தக்கது.