33 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி - முக்கிய பின்னணி!
33 வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கருக்கலைப்பு
டெல்லியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் திருமணத்திற்கு பின் கர்ப்பமாகியுள்ளார். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குழந்தைக்கு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்த குழந்தை பிறந்தால் ஏற்படும் கஷ்டங்களை எண்ணி கருவைக் கலைக்க மருத்துவமனை சென்றுள்ளார்.
ஆனால், அங்கு 24 வாரங்களுக்குள்தான் கருக்கலைப்பு செய்ய முடியும் எனக் கூறி மறுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண், நீதிமன்றத்தில் கருக்கலைப்புக்கு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பிரதிபா எம்.சிங், ஒரு கர்ப்பிணி பெண்,
நீதிமன்றம் அனுமதி
தனது கர்ப்பத்தை கலைக்கும் உரிமை, உலகமெங்கும் விவாதப்பொருளாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது சட்டத்தில் இந்த விஷயத்தில் பெண் தேர்வு செய்து கொள்கிற உரிமையை அங்கீகரிக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக மருத்துவ குழு, ஊனத்தின் அளவு அல்லது கருக்குழந்தை பிறப்பின் பின்னர் வாழும்விதம் குறித்து குறிப்பிடத்தக்க கருத்து எதையும் வழங்கவில்லை. இதனால், அத்தகைய எதிர்பாராத நிலையில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள விரும்புகிற பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில், இறுதி முடிவு எடுப்பதில் தாயின் விருப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.
பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பை அங்கீகரிகக வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதாக தீர்பளித்தார்.