ராம்தேவின் பதஞ்சலி; இதை நிறுத்தலனா.. கடும் கண்டனம் - விளாசிய உச்சநீதிமன்றம்!
பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம்.
கடும் கண்டனம்
மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, 82 தயாரிப்புகளில் 40 சதவிகித பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ராணுவ கேண்டீன்களில் விற்க தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.