ரூ.1000 கோடி இழப்பீடு - பாபா ராம்தேவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய ஐ.எம்.ஏ

BJP IMA Baba Ramdev Patanjali
By mohanelango May 26, 2021 11:09 AM GMT
Report

பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவருடைய பதஞ்சலி நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. Allopathy is stupid என பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.

இதற்கு இந்திய மருத்துவ கழகம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை தலையிட்டதற்குப் பிறகு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் தொடர்பான தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

தற்போது இந்திய மருத்துவ கழகம் பாபா ராம்தேவிடம் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கைச் சந்திக்க நேரிடும் எனவும் ஐ.எம்.ஏ எச்சரித்துள்ளது.