பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள் - பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு
‘ பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என பாபா ராமதேவ் கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.
பாபா ராமதேவ் சர்ச்சை பேச்சு
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம், மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) தானேயில் நடத்தப்பட்டது .
இதில் பதஞ்சலி தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமைவகித்தார். மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார்.
அப்போது பாபா ராமதேவ் யோகா பயிற்சிக்கு முன் பேசுகையில், ‘ பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என கூறினார்.
பாபா ராமதேவ், பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள். என கூறியது மஹாராஷ்டிராவில் மிகுந்த சர்ச்சையாகி வருகிறது.