எக்ஸ்ட்ரா சாம்பார் கொடுக்காததால் ஆத்திரம் - ஊழியரை அடித்தே கொன்ற தந்தை, மகன்!

Attempted Murder Chennai Crime
By Sumathi Mar 14, 2024 06:52 AM GMT
Report

கூடுதலாக சாம்பார் தராத சூபர்வைசர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா சாம்பார்..

சென்னை, பல்லாவரம் அருகே பம்மலில் செயல்படும் ஓட்டலில் தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூபர்வைசராக பணியில் இருந்துவந்தார்.

superwiser arun

இந்நிலையில், உணவகத்திற்கு அனகாபுத்தூரைச் சேர்ந்த சங்கர் (55), அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பாடு பார்சல் வாங்க வந்துள்ளனர்.

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பலி - திடுக் சம்பவம்

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பலி - திடுக் சம்பவம்

சூபர்வைசர் படுகொலை

அப்போது, அவர்களுக்கான பார்சல் கட்டி கொடுக்கப்பட்டபோது, தங்களுக்கு கூடுதலாக சாம்பார் பாக்கெட் ஒன்று வேண்டும் என்று தந்தை, மகன் இருவரும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அருண் கொடுக்க மறுத்துள்ளார். உடனே, தந்தை சங்கரும், மகன் அருண்குமாரும் அருணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எக்ஸ்ட்ரா சாம்பார் கொடுக்காததால் ஆத்திரம் - ஊழியரை அடித்தே கொன்ற தந்தை, மகன்! | Supervisor Murdered For Extra Sambar In Restaurant

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் அருணை தாக்கியுள்ளனர். இதில், சரிந்து விழுந்த அருண் மயங்கினார். உடனே சக ஊழியர்கள் அவரை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.