கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பலி - திடுக் சம்பவம்

Death Tirunelveli
By Sumathi Apr 06, 2023 07:31 AM GMT
Report

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கொதிக்கும் சாம்பார்

தென்காசி, கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ஏழை மாணவர்களும் ராணுவத்தில் சேருவதற்காக இலவச ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பலி - திடுக் சம்பவம் | 5 Year Old Baby Accidentally Dead In Kadayanallur

சம்பவத்தன்று, சிவன்மாரி மனைவி கலா, மகன்கள் முகேஷ் (8) மற்றும் இஷாந்த் (5) ஆகியோர் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்த இஷாந்த் அங்குள்ள மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த

குழந்தை பலி

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.