பிரபல ஹோட்டல் சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

tamilnadu-samugam-hotel
By Nandhini Aug 11, 2021 01:10 PM GMT
Report

சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் சாப்பாட்டில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி. சாலையில் காரைக்குடி செட்டிநாடி மெஸ் கடந்த 4 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் பிரபலமான ஹோட்டல் என்பதால், எந்நேரமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்து கொண்டிருப்பர்.

இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணிக்கு பாளையங்கோட்டையைச் சேர்ந்த இசக்கி (34), அவரது நண்பர்கள் மூன்று பேர் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வந்தனர்.

இவர்கள் சாப்பிட உட்கார்ந்ததும் முதலில் வெள்ளை சாதத்தை போட்டுள்ளனர். அதற்கு பிறகு சாம்பார் ஊற்றி உள்ளனர். அந்த சாம்பாரில் பல்லி ஒன்று இருந்ததை கண்டு இசக்கியும், அவருடைய நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனையடுத்து உடனடியாக அந்த உணவகத்தினர் மீதமிருந்த மற்ற சாப்பாடுகளை கீழே கொட்டிவிட்டனர்.

இது தொடர்பாக, இசக்கி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு போலீசாரும், பல்லாவரம் நகராட்சி அலுவலக சுகாதார அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அவர்கள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இசக்கி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் உணவக மேலாளர் தர்மதுரை என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல ஹோட்டல் சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | Tamilnadu Samugam Hotel

பிரபல ஹோட்டல் சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | Tamilnadu Samugam Hotel