லெஸ்பியனா?.. பெண்ணுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த குக் வித் கோமாளி சுனிதா - ஷாக்கில் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி சுனிதா பெண்ணிற்கு முத்தம் கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுனிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சுனிதா. இவர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்த இவர், தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது அரை குறை தமிழில் பேசி பல ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
முத்தம்
இந்நிலையில், இயக்குனர் ரஜித் இயக்கத்தில் தயாராகும் Flakka என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இதில் இவர் லெஸ்பியனாக நடித்துள்ளார், அந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் இவர் ஒரு பெண்ணுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல் உள்ளது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், சிலர் இந்த மாதிரி லெஸ்பியன் படம் எல்லாம் வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை IBC Tamil