சிவகார்த்திகேயன், இமான் மனைவி விவகாரம்.. என்கிட்ட ஆடியோ ஆதாரமே இருக்கு - பிரபலம் பேட்டி!
இமான் மற்றும் சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
விவகாரம்
தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார். இது குறித்து வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறினார்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூபர் வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார். அதில், "ஒருவரை நம்பி வீட்டிற்குள் அழைக்கும் போது அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். அதே போல இந்த விவாகரத்தை மறுத்து அறிக்கை வெளியிட்ட இமானின் முன்னாள் மனைவி, சிவகார்த்திகேயனை நல்லவர், வல்லவர் என்று சொன்னபோதே உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
இந்த விவகாரத்தில் மோனிகா கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்து இருக்கலாம். இந்த விவகாரத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது. இருவரின் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து விட்டார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு யூடியூபில் ஆதரவாக பேசுகிறவர்களுக்கு பெரும் தொகையும், எதிராக பேசுபவர்களின் யூடியூப் சேனலுக்கு ஸ்டைக் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒரு ஆடியோ ஆதாரமே என்னிடம் உள்ளது. அதை தேவைப்பட்டால் வெளியிடுவேன்" என்று கூறியுள்ளார்.