லோகேஷ் கேட்டாரு.. ஓகேவா, தெரிஞ்சு தான் பண்றிங்களானு கேட்டேன் - சின்னமயி பேட்டி!
பாடகி தனது அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சின்மயி
தமிழ் சினிமாவில் பல மெலடி பாடல்களை பாடி அனைவர் மனத்திலும் இடம் பிடித்தவர் பாடகி சின்மயி. இவர் முதலில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்தார். பின்னர் இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவருக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது, சமீபத்தில் தான் இவரது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டார்.
பாடகி பேட்டி
இந்நிலையில், பாடகி சின்மயி லியோ படத்தில் 5 வருடத்திற்கு பின்னர் டப்பிங் செய்துள்ளார். அதன் அனுபவம் குறித்து அவர் பேசுகையில், "லோகேஷ் சார் வந்து கேட்டபொழுது.. சார் தெரிஞ்சு தான் பண்றிங்களா என்று கேட்டேன்.

அவர் பாத்துக்கலாம் மேடம் அப்டினாரு அவ்ளோதான். முதலில் டெஸ்ட்க்கு சென்றேன், எனக்கு கண் கலங்கியது" என்று பேசினார்.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil