சிவகார்த்திகேயன் அதற்கு சப்போர்ட் பண்ணல.. இதுல என்ன தப்பு இருக்கு - மௌனம் உடைத்த இமானின் மனைவி!
இமானின் மனைவி சிவகார்த்திகேயன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
துரோகம்
தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான். இவர் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் இமான். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார். இது குறித்து வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறினார்.
மனைவி பேட்டி
இந்நிலையில், இமானின் முதல் மனைவி மோனிகா, "சிவகார்த்திகேயன் எங்களோட குடும்ப நண்பர். ரொம்ப டீசன்ட்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற அடிப்படையில, எங்கக் குடும்பத்துமேல அக்கறையா இருப்பாரு. என் மகள்களுக்கும் அவரைப் பிடிக்கும்.
அதனாலதான், எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு சமாதானம் பேசி பஞ்சாயத்துப் பண்ணி வைக்க வந்தார். ஒரு குடும்பம் சிதறிடக்கூடாதுங்குற நல்லெண்ணத்துல நாங்க ஒற்றுமையா வாழணும்னு நினைச்சு சமாதான முயற்சிகளையும் எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. நியாயத்துப் பக்கம் நின்னார்.
அது இமானுக்குப் பிடிக்கல. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணலங்கிறதைதான், இமான் துரோகம்னு சொல்றார்ங்கிறது எனக்குப் புரியுது. ஆனா, அதை வெளில வேறமாதிரி புரிஞ்சுக்குறாங்க. இதுல, சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு இருக்கு? " என்று கூறியுள்ளார்.